புரதம் அதற்கெதிராக தசை பொருண்மைப் பெருக்கி.

புரதம் அதற்கெதிராக தசை பொருண்மைப் பெருக்கி.
  1. protein vs mass gainer copy புரதப்பொடிகளுக்கும் தசை பொருண்மைப் பெருக்கிகளுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

தசை பொருண்மைப் பெருக்கிகளும் புரதம்தான். பொதுவாக பொருண்மைப் பெருக்கிகள் 22 லிருந்து 35% வரையிலான புரதத்தை வழங்கும் அதுவே புரதப்பொடியென்றால் 60%க்கும் அதிகமான புரதத்தை வழங்கும். பொருண்மைப் பெருக்கிகள் வழக்கமாக உள்ள புரதப்பொடிகளை விட அதிகமான எரிசக்தியை தன்னகத்தே கொண்டவை. பொருண்மைப் பெருக்கிகளில் உங்களின் உடல் எடுத்துக்கொள்ளும் எரிசக்தியை உயர்த்தும் விதமாக மாவுச்சத்தையும் ,கொழுப்புச்சத்தையும் அதிகளவில் கொண்டவை. இவை இரண்டுமே தசைகளை மீட்டெடுக்கவும், தசை வளர்ச்சிக்கும் பயன்படுட்தப்படுகின்றன.சிறந்த பொருண்மைப் பெருக்கிகளில் நீடித்த சக்தியை அளிக்கும் பொருட்டு சர்க்கரை அற்ற பல்கூட்டு மாவுச்சத்தை கொண்டவை.

  1. தசைகளை வளர்த்தெடுக்கும் விருப்பம் உடையவர்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கும்?

ஒரு குறிப்பிடத்தக்க அளவு தசைப் பொருண்மைப் பெருக்கத்தை அடைய விருப்பமுள்ள ஒருவர் அதைப்பெருக்க கடினப்பட்டாலோ அல்லது அவருக்கு சுலபமாக எடையை அதிகரிக்க முடியவில்லை என்றாலோ அவருக்கு பொருண்மைப் பெருக்கிகள் பொருத்தமாக இருக்கும். அதே சமயம் உடலில் கொழுப்புச் சத்து விழுக்காட்டு அளவை கட்டுப்படுத்தி மெதுவான வளர்ச்சியை அடைய விரும்பும் ஒருவருக்கு புரதப்பொடிகள் போதுமானதாக இருக்கும். இதற்கு மாறாக கொழுப்புச்சத்து அதிகரிப்பதை தவிர்க்க பொருண்மைப் பெருக்கிகள் மற்றும் புரதப்பொடிகள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாம்.

  1. கொழுப்பைக் குறைக்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அவருக்கு இன்னும் புரதம் தேவைப்படுமா?

ஒருவர் ஏற்கனவே தேவையான அளவிற்கு தசை பொருண்மையை அடைந்து விட்டு கொழுப்புச்சத்தை குறைக்க தயாராக இருந்தார் என்றால் புரதப்பொடிகள் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவரின் உடல் ஏற்கனவே வளர்த்தெடுத்த தசைகளை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக. கொழுப்பைக் குறைக்க இதயத்தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தசைகள் சிதைவடைவதை தடுக்கும். இது மிக முக்கியமான ஒன்று ஏனென்றால் அப்பொழுதுதான் தேவையில்லாத கொழுப்பை குறைத்த பிறகும் ஒருவரின் தசைக் கட்டமைப்பு குலையாமல் இருக்கும்.

  1. புரதப்பொடிகள் குறைப்பதற்காக மட்டும்தானா?

புரதப்பொடிகள் வளர்த்தெடுப்பதற்கு மற்றும் குறைப்பதற்கு இரண்டுக்குமானது. வளர்த் தெடுப்பதற்க்கு சிலர் பொருண்மைப் பெருக்கிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இன்னும் சிலர் (சுலபமாக எடை அதிகரிப்பவர்கள் மீசோமார்ப்ஸ் மற்றும் எண்டேமார்ப்ஸ்- பருத்த உடலமைப்பு உடையவர்கள்) தேவையில்லாமல் எரிசக்தி அதிகரிப்பதை தவிற்கும் பொருட்டு புரதப்பொடிகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

  1. புரதம்/பொருண்மைப் பெருக்கிகளை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடாத ஒருவருக்கு என்ன நிகழும்? அவர் வளர்ச்சியடைவாரா?

புரதத்தின் பயன்பாடென்பது தசைகளை மீட்டெடுப்பதும், தசைகளை பராமரிப்பதும். அதன் காரணமாக தசைகள் பெரிதாகவும் சக்திமிக்கதாகவும் விளங்கும். ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடவில்லையென்றால் தசைகளை மீட்டெடுக்கும் அவசியம் இல்லை. ஏனென்றால் அவரின் உடல் புரதத்தை சேமித்து வைக்காது, அது ஒரு பண விரையமாகும். அவர் பொருண்மைப் பெருக்கிகளை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பாரேயானால் அவரின் தினசரித் தேவைக்கு அதிகமான எரிசக்தியை உட்கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அவர் தசைகளை வளர்த்துக் கொள்ளுவதற்கு பதிலாக கொழுப்பை உடலில் வளர்த்துக் கொண்டிருப்பார். அவர் இணை ஊட்டச்சத்துகளை வாங்குவதற்கு பணத்தை விரையம் செய்து கொண்டிருப்பார்.

  1. நான் அதிகளவில் புரதத்தை எடுத்துக்கொள்ள முடியுமா?

ஒருவருக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் அல்லது பாரம்பரிய நோய் பிரச்சினைகள் இருக்குமானால் தயவுசெய்து முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உடலானது அதற்குத் தேவையான புரதத்தை எடுத்துக்கொண்டு மிகுதியான நைட்ரோஜனை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். அதன் காரணமாகவே ஆரோக்கியமாக இயங்கும் கல்லீரலும் சிறுநீரகமும் இருப்பது இன்றியமையாதது. ஒருவர் இணை ஊட்டச்சத்துகள் மற்றும் உணவுத்திட்டத்தின் மூலம் அதிகளவில் உயர் புரத உணவை எடுத்துக் கொள்ளுவாரேயானால், அவர் அதிகளவில் நீரை பருகுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Please note, comments must be approved before they are published