Tamil

ஓரு நாளில் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

ஒருவர் ஒரு நாளில் அல்லது ஒரே சமயத்தில் எத்தனை முட்டைகளை உண்ணலாம்? ஒரு நாளில் 20-30 முட்டைகள் அல்லது அதற்கும் மேல் உண்ணுகிறார்கள் என்று சிலர் (சத்துணவு நிபுணர் + உடற்கட்டு நிபுணராக தன்னைத்தானே அறிவித்துக் கொள்பவர்கள்) சொல்லுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.  அவர்களுக்கு அது மிக அதிக தசைப்பற்றை அளிக்கிறது என்று  இந்த புரதச்சத்து வெறியர்கள் சொல்லுவதை செவிமடுக்கும்போது உண்மையாகவே வேடிக்கையாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் அவர்களால் அதை அனைத்தையும் சீரணிக்க முடியாது மற்றும் அதில் செரிக்கப்படாத […]

ஸ்டீராய்ட்கள் தசை வெறியர்களை கொல்கிறது

30ஐ நெருங்கும் மற்றும்  முப்பதுகளின்  ஆரம்பகட்ட வயதிலுள்ள  பல ஆண்கள், ஸ்டீராய்டுகளை(ஊக்க மருந்துகள்), தவறாக பயன்படுத்துவதால், தீவிரமான இதய நோய்களுக்கு ஆளாகி இறந்து கொண்டிருக்கிறார்கள் என, ஒரு நியூ சௌத் வேல்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது. அதிகரிக்கும் ஸ்டீராய்டு பயனர்களுக்கு அதனால் ஏற்படும் உடல் ரீதியான அபாயங்கள் குறித்து அறிந்திருக்கவில்லையென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். செயல் திறன் அதிகாரிக்கும் ஊக்க மருந்துகளால் இதய நோய், இனப்பெருக்க குறைபாடு, கல்லீரல் பாதிப்பு, போன்ற அபாயங்கள் ஏற்படும் நிலை கவலையளிக்கிறதென ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். […]

பெரிய மேற்கை தசைகளின் ரகசியம்

பெரிய மேற்கைகள்(பைசெப்ஸ்) இருந்தால் அதிக அளவில் பயிற்சி எடுத்திருப்பார் என்பதல்ல பொருள். பெரிய தசைகள் பெற அதிக எண்ணிக்கை செட்கள் (செட் என்பது அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் செய்யும் பயிற்சி தொகுப்பு) மற்றும் அதிக எடை தூக்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் உண்மை. அப்படியிருக்க சிறிய தசைகளுக்கு குறைந்த செட்களும் உகந்த எடையும் தான் தேவை. உடலில் இருக்கும் தசைகளிலயே மிக சிறிய தொகுப்பு தான் பைசெப்ஸ் தசை. அவைகள் இழுப்பதற்கு பயன்படும் தசைகள், இவைகள் […]

புரதம் அதற்கெதிராக தசை பொருண்மைப் பெருக்கி.

 புரதப்பொடிகளுக்கும் தசை பொருண்மைப் பெருக்கிகளுக்கும் உள்ள வேற்றுமை என்ன? தசை பொருண்மைப் பெருக்கிகளும் புரதம்தான். பொதுவாக பொருண்மைப் பெருக்கிகள்  22 லிருந்து 35% வரையிலான புரதத்தை வழங்கும் அதுவே புரதப்பொடியென்றால் 60%க்கும் அதிகமான புரதத்தை வழங்கும். பொருண்மைப் பெருக்கிகள் வழக்கமாக உள்ள புரதப்பொடிகளை விட அதிகமான எரிசக்தியை தன்னகத்தே கொண்டவை. பொருண்மைப் பெருக்கிகளில் உங்களின் உடல் எடுத்துக்கொள்ளும் எரிசக்தியை உயர்த்தும் விதமாக மாவுச்சத்தையும் ,கொழுப்புச்சத்தையும் அதிகளவில் கொண்டவை. இவை இரண்டுமே தசைகளை மீட்டெடுக்கவும், தசை வளர்ச்சிக்கும் பயன்படுட்தப்படுகின்றன.சிறந்த […]

உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதற்கான சரியான வயது.

இப்பொழுது உலா வந்துகொண்டிருக்கும் எண்ணங்களில் மிகப்பெரியது,  உடற்பயிற்சியை தொடங்குவதற்கான மிகக் குறைந்த வயது வரம்பு என்ன என்ற எண்ணமே.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிற்சி என்பது பிறந்த முதல் மாதத்திலிருந்தே கைகாலுறுப்புகள் மற்றும் ,உடற்பகுதிகளில் இயற்கையாகவே மேற்கொள்ளும் அசைவுகள் எனலாம்; குழந்தைக்கு உறுதி, சக்தி, மற்றும் நெகிழ்வுத்தன்மைகள் அதன் வாழ்க்கையின் பிறந்த முதல் வருடத்திலேயே வளரத்தொடங்குகின்றன.  குழந்தை மல்லாந்து படுத்துக்கொண்டு அதன் கை, கால்களை பல நிமிடங்களுக்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக அசைத்துக்கொண்டிருக்கிறது. அதையே ஒரு வயதுவந்தவர் தொடர்ந்து […]