உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வதற்கான சரியான வயது.

by | Apr 11, 2016

right age to go to gym

இப்பொழுது உலா வந்துகொண்டிருக்கும் எண்ணங்களில் மிகப்பெரியது,  உடற்பயிற்சியை தொடங்குவதற்கான மிகக் குறைந்த வயது வரம்பு என்ன என்ற எண்ணமே.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உடற்பயிற்சி என்பது பிறந்த முதல் மாதத்திலிருந்தே கைகாலுறுப்புகள் மற்றும் ,உடற்பகுதிகளில் இயற்கையாகவே மேற்கொள்ளும் அசைவுகள் எனலாம்; குழந்தைக்கு உறுதி, சக்தி, மற்றும் நெகிழ்வுத்தன்மைகள் அதன் வாழ்க்கையின் பிறந்த முதல் வருடத்திலேயே வளரத்தொடங்குகின்றன.  குழந்தை மல்லாந்து படுத்துக்கொண்டு அதன் கை, கால்களை பல நிமிடங்களுக்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக அசைத்துக்கொண்டிருக்கிறது. அதையே ஒரு வயதுவந்தவர் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு செய்வாரேயானால் நிச்சயமாக களைப்படைந்து விடுவார்.தவழ்வது, நடப்பது, ஒடுவது, துவிச்சக்கரத்தை ஓட்டுவது இவை எல்லாம் தடைகளுக்கு எதிராக தசைகளை இயக்க முயற்சிக்கும் ஒருவகை உடற்பயிற்சி நடவடிக்கைகள்தான்

நடப்பதற்கும், துவிச்சக்கர வண்டியை ஒட்டுவதற்கும், நீந்துவதற்கும், ஒடுவதற்கும் குழந்தைகளுக்கு மத்தியில் வயது வரம்பு இல்லையென்றால் உடற்பயிற்சி தொடங்குவதற்கு மட்டும் ஏன் வயது வரம்பு?  உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யப்படும் அனைத்து பயிற்சி அசைவுகளும் தசைகளின் இயற்கையான, இயல்பான அசைவுகளே என்பதை நீங்கள் சுலபமாக கண்டறிய முடியும். அழுந்தி எழுதல், குந்தி எழுதல், நாடிஉயர்த்துதல், முன் பக்க அழுத்தம், எடை சுழற்றுதல் ஆகிய அசைவுகள் இயற்கையான உயிர் இயந்திரவியல் இயக்கங்கள். அது தடைக்கு எதிராக தசைகள் நடத்தும் தசைத்தொகுப்பின் உயிரியல் இயக்கம். இது மூட்டுகளிலும் மூட்டிணைப்பு தசை நார்களிலும் அழுத்தத்தை குறைத்து  தசைகளை வலுப்பெறச்செய்கிறது. ஆனால் மல்யுத்தம்,கபடி,குத்துச்சண்டை, அனைத்து பந்து மற்றும் மட்டை  விளையாட்டுகள், ஆகியவை அதிதீவிரத்துடன் விளையாடப்படுவதால் காயத்தை விளைவிக்கக் கூடியவை. இம்மாதிரி விளையாட்டுகளில் அடுத்த இயக்கம் என்ன, தசை, மூட்டு, மூட்டிணைப்புத் தசை அல்லது தசைநார்  இவற்றில் எதற்கு சக்தி கொடுத்து முயற்சிக்க வேண்டும் என்ற நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. இதற்காக உடல் சில அசாதாரணமான,கோட்பாடற்ற சுழலுதல், துடுப்பு போடுதல், சுழல்மைய்யம் கொள்ளுதல்,சுழற்றல், பின்வளைதல் போன்றவற்றை செய்ய நேரிடும். இந்த இயக்கங்கள் காயம் ஏற்படுத்தக்கூடியவை. அவை கடினமான மற்றும் முழுமைபெற நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தேவையற்ற சுளுக்கு மற்றும் திரிபு போன்ற  சிரமத்தை அளிக்கும்.

மாறாக உடற்பயிற்சிகூட இயக்கங்கள் இயற்கையில் சுலபமான செய்யக்கூடிய உடற்கூறு இயக்கங்களான தசைகளை மடக்கி நீட்டும் வகையிலானவை. அவை குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் மீண்டும் திரும்பச்செய்வதால் மூட்டு, மூட்டிணைப்பு தசை, மற்றும் தசைநார்களுக்கு விலக்களித்து தசைகளுக்கு வலுவூட்டுகிறது. ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் 14 வயதுக்குட்பட்டோர் இதில் ஈடுபடும்போது அதற்கான கவனம், ஈடுபாடு, தீவிரம், நிலைத்தன்மை,சமநிலை, தற்காப்பு, விழிப்புணர்வு,முடிவை எதிர்கொள்ளும் நிலை ஆகியவறை சரிவர கடைப்பிடிக்காமல் இருக்கும் நிலையில் பயிற்சியின் போது கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பயிற்சிக்கூட பயிற்சிகள் சிறிது அலுப்பூட்டக்கூடியவை என்ற காரணத்தால் இதில் அதிக நேரம் ஈடுபட இளம் வயதினரை இது  ஈர்ப்பதில்லை. புதிதாக வருகை தருபவர்களுக்கு இந்த பயிற்சிகளை மகிழ்ச்சிகரமாக மாற்றி அதன் அடிப்படை, பாதுகாப்பு,பயிற்சிகளின் சரியான இயக்கங்கள், ஆகியவற்றை கற்பிப்பது பயிற்சியாளரின் கடமை. அதன் மூலம் அவர்கள் சரியான நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏதுவாகும். அதிகளவில் உடற்பயிற்சி கருவிகள் சந்தைக்கும் மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கும் வந்தது மிகப்பெரிய பாராட்டுக்குரியது. அவை மிக பாதுகாப்பானவை மற்றும் உடல் இயக்க நடவடிக்கைகள், இயந்திர கருவிகளின் இயக்கத்துடன் ஒத்தியங்கும் வகையில் இருக்கிறது.

பயிற்சிகூட பயிற்சிகளின் பயன்களை பிரச்சினைகள் ஏதுமின்றி அடையமுடியும் என்ற காரணத்தால் ஏறத்தாழ 14 வயதினருக்கு அவை மிகச்சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகின்றன. பயிற்சிக்கூட பயிற்சிகளில் ஈடுபடும் இந்த வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலிலுள்ள இயற்கை வளரூக்கிகள் (ஹார்மோன்கள்) அதிகரித்து இயற்கையான வளர்ச்சிக் காரணிகளுக்கு ஆற்றல் அளிக்கின்றன. இதனால் நல்ல வலுவுள்ள சதைப்பிடிப்புடன் கூடிய மெலிந்த ஆரோக்கியமான உடலமைப்பை ஆண்களும், நல்ல வடிவத்துடன், மெலிந்த ஆரோக்கியமான நளினமான வளைவுகளுடன் கூடிய உடலமைப்பை பெண்களும் அடைவார்கள். குழந்தைகள் மன ஆரோக்கியத்துடனும், நல்ல அறிவாற்றலுடனும் கூடிய பயிற்சியை பெற நன்கு தகுதியுடைய, சான்றிதழ் பெற்ற, மற்றும் ஊக்கமளிக்கும் திறன் கொண்ட பயிற்சியாளர்களைக் கொண்டு  அளிப்பதில் கவனமாயிருங்கள்.

bodybuilding india franchise

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Importance of Cardio Training and Why it’s Essential

Importance of Cardio Training and Why it’s Essential

Cardiovascular training, also known as aerobic training, is any form of exercise that elevates the heart rate due to the repeated contraction of muscles while utilizing the aerobic and even, at times, the anaerobic energy system. In other terms, cardio training is any...

How to Eat Healthy On a Vacation

How to Eat Healthy On a Vacation

A vacation is a time to relax, explore and embrace a break from your busy life. But, whether you’re visiting family or traveling with them, it can at times be a stressful affair that disrupts healthy eating routines. However, with proper planning, we can show you how...

Tips to lose belly fat and live a healthier life

Tips to lose belly fat and live a healthier life

Maintaining a slim mid-area does more than make you look great—it can help you live longer. Larger waistlines are linked to a higher risk of heart disease, diabetes, and even cancer. Losing weight, especially belly fat, is no easy task if you’re metabolically broken...

Pilates: The New Fitness Mantra

Pilates: The New Fitness Mantra

Pilates, a form of exercise which emphasis on our core strength and concentrates on strengthening the body. This exercise helps in general fitness and our overall health. Pilates is similar to yoga, concentrates on posture, balance, and flexibility of our body. ...

Yogurt: A Balanced Nutrition Source

Yogurt: A Balanced Nutrition Source

What is yogurt? Yogurt is a food made through a process of bacterial fermentation of milk and different types of bacteria such as bifidobacteria and lactobacillus. Traditionally, yogurt is made with cow’s milk, but some cultures use the goat, water...

Incredible Yoga Poses For Weight Loss

Incredible Yoga Poses For Weight Loss

One of the biggest delusions about yoga is that people believe it is only used to calm your mind and gain flexibility. But yoga can help you in losing weight if you do it with discipline and dedication. Moreover, yoga also helps you in relieving stress and tensions...

Bestselling Products

Bestselling Brands

OWN A FRANCHISE

GET IN TOUCH

HELP CENTER

Thank you for subscribing! Use Coupon Code: BBI5

Pin It on Pinterest

Share This